மாணவிகளுக்கு சீன் போடும் மாணவர்கள்! பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!
ஜி.கே.சேகரன்,
ஏதாவது ஆச்சுன்னா நான் தான் பதில் சொல்லணும்! பலமுறை சொல்லியும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிவரும் கல்லூரி மாணவர்கள்! அரசு பேருந்து நடுவழியில் நிறுத்திய ஓட்டுனர்!
திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் வரை செல்லும் அரசு பேருந்து, பெங்களூர் சென்று திரும்பவும் பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை நேரத்தில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்தடைவது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கம்போல மாலை அந்த அரசு பேருந்து கந்திலி அருகே வந்து கொண்டிருந்தபோது கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகளும் அந்த பேருந்தில் பயணித்துள்ளனர்.

அப்போது மாணவர்கள் அந்த அரசு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.இந்த தவறை செய்யக்கூடாது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மாணவர்களிடம் கூறியும் அதனை கண்டுகொள்ளாமல் படிக்கட்டில் பயணித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பாரண்டப்பள்ளி கூட்ரோடு அருகே அரசு பேருந்து நடுவழியில் நிறுத்தினார் மேலும் உள்ளே அமர்ந்தால் தான் பேருந்தை இயக்குவேன் என சொன்னார்.
இருப்பினும் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிப்பேன் என்ற மனநிலையில் இருந்த மாணவர்களை ஒன்னும் செய்ய முடியாமல் வேறு வழியில்லாமல் பேருந்தை ஓட்டுனர் இயக்கினார்.
மேலும் இது குறித்து நடத்துனர் கூறுகையில் உள்ளே இருக்கையில் இருந்தும் அடாவடித்தனமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். மாணவர்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதற்கு நாங்க தான் பதில் சொல்லணும் எனவும் கூறினார்.
அதே போல் கல்லூரி மாணவிகள் பேருந்தில் பயணிப்பதால் அவர்கள் முன்னிலையில் சீன் போடுவதற்காகவே இது போல் செயலில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

admin
