சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா!

சிறப்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா!

  ஜி.கே.சேகரன்,

 கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் மக்கள் கலந்துகொண்டு பக்திபாடல்களை பாடி கொண்டாடினர். 

 வேலூர்மாவட்டம்,வேலூரில் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா வேலூர்மறைமாவட்ட பேராயர் ராபர்ட் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தது.

 சபையோர், குருமார்கள் ஊர்வலமாக வந்து ஆலயத்தில் பிரார்த்தணையை துவங்கினார்கள்.

  நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வண்ணம் குழந்தை இயேசுவை எடுத்து காட்டி அதனை வழிபாடுகள் செய்து தொழுவத்தில் வைத்தனர்.

 பல்வேறு கிறிஸ்துவின் பிரார்த்தனை பாடல்களையும் பொதுமக்கள் பாடினார்கள் சிறப்பு பிரார்த்தணையும் நடந்தது.

 இதே போன்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள சி.எஸ்.ஐ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஹெச்.சர்மா நித்தியானந்தம் அவர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். 

  வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திருப்பத்தூர்,ஆம்பூர்,வாணியம்பாடி,காட்பாடிகுடியாத்தம்,ஆற்காடு,ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன