இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நால்வர் ஆயுதப்படைக்கு மாற்றம்! லஞ்ச புகாருக்கு இது தான் பனிஷ்மென்ட்டா?!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரவில் வெளியூரில் இருந்து உயர் ரக போதைப்பொ ருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் சில நாட்களுக்கு முன்பு உள்ளி கூட்ரோடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆசிப், காட்பாடியை சேர்ந்த முபாரக் ஆகியோர் மெத்தபெட்ட மைன் என்ற உயர்ரகபோதைப் பொருளை கடத்தி வந்ததாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காட்பாடி திருவலம் ரோடு பகுதியை சேர்ந்த தர்மன் மகன் ஸ்ரீ (வயது 23), கிருஷ்ணகிரி கனகமுட்லு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நரேஷ் (24) ஆகியோரை பேரணாம்பட்டு அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான 2 பேரும் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்தி வந்து வேலூர் மாவட்டத்தில் பலருக்கு விற்பனை செய்ததாக கூறினர்.
போலீஸ்தரப்பில் இப்படி சொல்லப்பட்டாலும் கூட இந்த வழக்கில் ஆறு நபர்களை இன்ஸ்பெக்டர் அன்ட் டீம் பணம் பெற்றுகொண்டு அவர்களை கழற்றிவிட்டுவிட்டார்களாம்.
இது தொடர்பான ரகசிய தகவல்கள் மாவட்ட காவல் அலுவலகத்தின் காதுகளுக்கு சென்றதும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், போலீஸ்காரர் தீனதயாளன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாமன்யர்கள் மீது புகார் எழுந்தால் பாயும் புலியாக மாறும் போலீசார் வழக்கு வாய்தா என்று சிக்கவைக்கிறார்கள். அதே அவர்கள் தவறிழைத்தால் ஆயுதபடைக்கு மாற்றி சேஃப்டி செய்து விடுகிறார்கள். சில வாரங்கள் கழித்து அவர்கள் மீண்டும் லோக்கல் ஸ்டேஷன்களுக்கே திரும்பி வழக்கம் போல கட்டிங்கில் இறங்கிவிடுவார்கள். இது என்னங்க நியாயம் என்பது மக்களின் கேள்வி.
எது எப்படியோ? காட்பாடி பகுதியில் போதை வஸ்துக்களை விற்கும் குரூப் ஏராளமாக உள்ளனர் என்பதற்கு இந்த வழக்கே சாட்சி.

admin
