மதிக்காத ஊராட்சி மன்ற தலைவர்! தர்ணாவால் பரபரப்பு!

மதிக்காத ஊராட்சி மன்ற தலைவர்! தர்ணாவால் பரபரப்பு!

ஜி.குலசேகரன்,

  சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களால் பரபரப்பு ஏற்பட்டது

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஜவகர்லால் என்பவர் செயல்பட்டு வரும் நிலையில், ஊராட்சியில் குடிநீர், மின்விளக்கு,சாலை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

  மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கடந்த நான்கு வருடங்களாக வார்டு உறுப்பினர்களை மதிக்கவில்லை எனக்கூறி ஆத்திரம் அடைந்த  வார்டு உறுப்பினர்களான ராஜா,ராஜகுமாரன்,மலர் கொடி பாண்டியன்,பசுபதி உள்ளிட்டோர்

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.