எம்பி செய்த பணிகளை பைனா கூலர் மூலம் தேடிய மதுரை அதிமுக வேட்பாளர்! ஏம்பா மூடிய கழட்டிட்டு பாருப்பா என்று திமுகவினர் கிண்டல்!!

ம.பா.கெஜராஜ்,
சிட்டிங் எம்பி கடந்த 5 ஆண்டுகளாக என்னதான் செய்தார் என்பதை பைனா கூலர் வைத்து தேடினார் மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன்.
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
இவர் ஏற்கனவே அந்த தொகுதியின் எம்பி என்கிற நிலையில் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் நல பணிகள் எதையும் தொகுதிக்குள் செய்யவில்லையாம்.
எனவே அதிமுக வேட்பாளர் சரவணன், தற்போதைய கம்யூனிஸ்ட் வேட்பாளரும், எம்பியுமான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது பணியை செய்திருக்கிறாரா என்பதை பைனா கூலர் வைத்து தேடிப் பார்த்துவிட்டு, இந்த எம்பி ஒரு பணியும் செய்த மாதிரி தெரியவில்லையே என்று கமெண்ட் அடித்தார்.
ஆனால் அவர் அந்த பைனாகூலரின் மூடியை கழட்டாமல் அப்படியே பார்த்தார்.
ஏங்க அந்த பைனாகூலரின் மூடியை கழட்டிட்டு பாருங்க அப்ப தெரியும் என்று திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் சரவணனை நக்கல் அடித்து வருகிறார்கள்.