அம்மா அது சிறுத்தைதானா? விவசாயிகள் சந்தேகம்!

 அம்மா அது சிறுத்தைதானா? விவசாயிகள் சந்தேகம்!

கு.அசோக்,

சிறுத்தை பல மலைகிராம பகுதிகளில் கால்நடைகளை தாக்கி கடித்து கொல்கிறது மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் - சிறுத்தை பற்றி வதந்திகளையும் பரபரப்ப வேண்டாம் - காட்டோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நாளை முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நடக்கும் - விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை தகவல்

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டமானது நடந்தது.

 இதில் விவசாயிகள் பங்கேற்று பேசுகையில், மழைகாலம் என்பதால் ஆறுகளிலிருந்து நீரை ஏரிகளுக்கு திருப்ப வேண்டும் அப்போது தான் ஏரிகள் நீர் அதிகரிக்கும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் மேலும் தேவையான சாலை வசதிகள் பேருந்து வசதிகளையும் கிராமப்புறங்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

   யானைகள் வராமல் தடுக்க காட்டுபகுதிகளில் அகழிகளை அமைக்க வேண்டும், பழைய அகழிகளை புதுப்பிக்க வேண்டும்.

 மேலும் சிறுத்தை ஒரு பெண்ணை கொன்றுவிட்டது. கால்நடைகளான ஆடுகள் மாடுகளை கொல்வதாக கூறுகின்றனர் உண்மையாக சிறுத்தை உள்ளதா என்பதை அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டுமென பேசினார்கள்.

 அப்போது ஆட்சியர் சுப்பு லெட்சுமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், சிறுத்தைகள் நடமாட்டம் என்பது உள்ளது.

 மக்கள் காடுகளை ஒட்டிய இடங்களில் வீடு கட்டி தங்க கூடாது. மேலும் சிறுத்தைகள் வரும் வகையில் உயிரிழந்த ஆடுகள் மாடுகளை காட்டுரோம் வீசகூடாது. அவ்வாறு வீசினால் அந்த துர்நாற்றத்தை கண்டறிந்து சிறுத்தை வந்துவிடும்.

  ஆடுகள் மாடுகள் இறந்தால் அவைகளை புதைத்துவிட வேண்டும் சிறுத்தை மாலை நேரத்தில் தான் காட்டிலிருந்து வெளியே வரும். ஆகவே மாலை நேரங்களில் மக்கள் ஆடு மாடுகளை ஓட்டிகொண்டு வன பகுதிக்கு செல்ல கூடாது பாதுகாப்பாக இருவேண்டும்.

  மலைகிராம பகுதிகளில் சிறுத்தை கடித்து ஆடு மாடு பலியானது உண்மை தான் ஆகவே மக்கள் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பேசினார்கள்

 இக்கூட்டத்தில் முன்னதாக மறைந்த பாரதபிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அவருக்காக மௌன அஞ்ச்லியும் செலுத்தப்பட்டது