செயற்கை மணல் தயாரிப்பு பிரச்சனை! தந்தை மகன் கடத்தல்! மூன்று பேர் கைது! 5பேருக்கு வலை வீச்சு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியைச் சேர்ந்த சுரேஷ். இவருடைய மகன் ஹரிஹரன் இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். கூடவே அவ்வப்போது மண் கடத்தல் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கந்திலி மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனியுடன் தொழில் போட்டியும் மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பல் சுரேஷ் என்பவருடைய நிலத்தில் அமர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற சுரேஷ் தன்னுடைய நிலத்தில் குடிக்க கூடாது என்று கூறியதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுரேஷ் தன்னுடைய மகனான ஹரிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது பழனி மற்றும் ஹரிகரனுக்கும் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் முற்றியது.
அதன் பின்னர் பழனி மது அருந்தி கொண்டு இருந்த கும்பலுடன் ஒன்றாக சேர்ந்து ஹரிகரனை பார்க்க வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஹரிகரனும் மெடிக்கலை மூடிவிட்டு கந்திலிக்கு லட்சுமிபுரம் வழியாக சென்றுள்ளார்.
அப்போது ஹரிஹரன் வருவதை அறிந்த பழனி அவரை நிறுத்தி சாரா மாறியாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அவருடைய தொலைபேசியை பிடுங்கி ஆஃப் பண்ணி வைத்துள்ளனர் இதனால் நீண்ட நேரம் வராததை அறிந்த ஹரிகரின் தந்தை சுரேஷ் அவரைத் தேடிக் கொண்டு வெலக்கல்நத்தம் சென்று உள்ளார்.
அப்போது பழனியின் கும்பல் தனது மகனை சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தது அறிந்து அங்கு சென்று கேட்டபோது அவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
அதன் பின்பு அங்கிருந்து தந்தையையும் மகனையும் கடத்திச் சென்று லட்சுமிபுரம் காப்பு காட்டில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மயக்கமடைந்த இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி செல்லும் சாலை ராயக்கோட்டை அருகே ரோட்டோரமாக அந்த கும்பல் வீசி சென்றுள்ளனர்.
மேலும் ரோட்டோரமாக இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அக்கம்பாக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தனது கணவர் மற்றும் தன் மகன் காணவில்லை என தாயர் ஷீலா கந்திலி போலீஸாரிடம் புகார் அளித்திருந்த நிலையில் பழனி, மோகன் மற்றும் தமிழரசன் ஆகிய மூன்று பேரையும் இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஐந்து பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தொழில் மற்றும் பணப் பிரச்சனைக்காக தந்தை மகனை கடத்தி சாகும் அளவிற்கு அடித்து ரோட்டோரமாக வீசி சென்ற சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.