ரத்த தான முகாமில் மூலிகை செடிகள்!
கு.அசோக்,
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா அரசு ரத்த வங்கி, கொடைக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சோளிங்கர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு சங்க தலைவர் பிரபு தலைமை தாங்கினார். முகாமில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 75 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக மருத்துவமனையில் உள்ள மூலிகை தோட்டத்தில் பல்வேறு வகையான மூலிகை செடிகள் நட்டனர்.இந்த முகாமில் சங்க செயலாளர் சதீஷ், பொருளாளர் அருண்,சங்க பணி லோகநாதன்,மருத்து இயக்குனர் நவீன்குமார் மற்றும் சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள்பலர் கலந்து கொண்டனர்.

admin
