சோளிங்கர் பெரிய நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி!

சோளிங்கர் பெரிய நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி!

கு.அசோக்,

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் பொன்னை ஆற்றுக்கு நீர்வரத்து காரணமாக  அணைக்கட்டு கிழக்கு கால்வாய் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 460 ஏக்கர் பரப்பளவு கொண்டது சோளிங்கர் பெரிய ஏரி என்னும் சோழவாரி  தற்போது நிரம்பியது.

 இதனால் கடை வாசல் வழியாகச் உபரிநீர் வெளியேறி நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி நிரம்பியுள்ளதால் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என நகராட்சி நிர்வாகம், காவல்துறையில்  எச்சரிக்கை செய்துள்ளனர்.

  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏரி நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.