ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிடிபட்ட சீசிங் ராஜா சுட்டு சாகடிப்பட்டார்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிடிபட்ட சீசிங் ராஜா சுட்டு சாகடிப்பட்டார்!

ம.பா.கெஜராஜ்,

  கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.அந்த வரிசையில் 29 வது நபராக ரவுடி சீசிங் ராஜா என்கிற ரவுடி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக்  கொல்லப்பட்டார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  தாம்பரம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்ற சீசிங் ராஜா பிரபல ரவுடியாக வலம் வந்தார். இந்நிலையில்  தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாக சீசிங் ராஜா தேடப்பட்டு வந்தார்.  அதே போல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  ஆகவே, தாம்பரம் காவல் ஆணையர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தார். ஆந்திராவில் பதுங்கி இருந்த சிசிங் ராஜா போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

  அப்படியிருக்க கைது செய்யப்பட்ட அவரை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், ரவுடி சீசிங் ராஜாவை சென்னை நீலாங்காரை பகுதியில் உள்ள அக்கறை எஸ்கான் கோயில் பகுதியில் வைத்து போலீஸார் தற்காப்புக்காக என்கவுன்டர் செய்துள்ளனர். அப்போது, ரவுடி சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாராம்.

  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே திருவேங்டம் என்கிற ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்தது நினைவிருக்கலாம்.

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே திருவேங்டம் என்கிற ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்தது நினைவிருக்கலாம்.