கேக் சரியில்லை என்று ஊழியரை புரட்டியெடுத்த இளைஞர்கள்!

கேக் சரியில்லை என்று ஊழியரை புரட்டியெடுத்த இளைஞர்கள்!

ஜி.கே.சேகரன்,,

 ஆம்பூர் அருகே கேக கடையில் கேக் சரி இல்லை என கேட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம்

முற்றி கைகலப்பு கடை ஊழியரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கரும்பூர் கூட்டுச்சாலை பகுதியில் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவர் ஸ்வீட் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

  அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்தனர்.

  பின்னர் கேக் வாங்கி வர சென்ற போது கேக் சரியில்லை எனக்கூறி கடை ஊழியர் மற்றும் இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

 இது தொடர்பாக ராஜ்குமார் மற்றும் பாண்டியன் கடை ஊழியரை  சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்