வாய் கூசாம என் மேல் பழி போடுறீங்க! கரூர் சம்பவம் பற்றி தவெக விஜய்!

வாய் கூசாம என் மேல் பழி போடுறீங்க! கரூர் சம்பவம் பற்றி தவெக விஜய்!

ம.முகில்,

  இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இறுதி கட்ட பரப்புரை வேகம் பிடித்துள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னையின் பல பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்தார்.

 பின்னர் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 அப்போது அவர் திமுக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக ஆகியவற்றை குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தனது பேச்சில் கரூர் சம்பவங்கள் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்பான விஷயங்களையும் குறிப்பிட்டு பேசினார்.

  அதில்,கரூரில் என்ன நடந்ததுன்னு அந்த கரூர் மக்களை கேட்டாலே புட்டு புட்டு புட்டு வெப்பாங்க. என் மேல பழிய தூக்கி போடுறீங்க? என்னமோ நாங்க அரசியலை பண்ண மாட்டோம் இந்த விஷயத்துல எல்லாம் நாங்க அரசியலை பண்ண மாட்டோம்,வீடியோ போட்டுவிட்டு போய் சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு என் மேல பழியை தூக்கி போடுறிங்க.

  லேட்டா வந்துட்டாரு போலீஸ் கொடுத்த டைம்ல நாங்க இருந்த நாமக்கல் இருந்து கரூர் வர வழியில இருந்த மக்கள் எல்லாரையும் நான் என்ன அம்போன்னு விட்டுட்டு வர சொல்றீங்களா?

 கரூருக்கு நான் எப்படி வந்தால் எவ்வளவு நேரத்தில் வந்த உலகமே லைவ்ல பாத்துட்டு இருந்தது.

   வாய் கூசாம என் மேல் பழி போடுறீங்க ஒரு மனசாட்சி வேண்டாமா.. நீங்கள்தான் எந்த அரசியலும் செய்யவில்லை என்று சொல்கிறீர்களே. ஏன் சார் கரூரில் 10 வருடங்களாக போட்டி போட்ட ஒரு அடிமையை ஏன் கோயம்புத்தூர் வரைக்கும் ஓட வச்சீங்க.

  அதனால் மக்களே அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நீதி கேட்க வந்த விஜய். இப்போது நான் உங்களிடம் நீதி கேட்டு வந்து இருக்கேன்.

   நீங்கள் தயவு செய்து எனக்கு நீதி வழங்க வேண்டும்.வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உங்களுக்கான வாக்குசாவடியில் விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இது ஒரு தலைமுறைகான தேர்தல்.உங்களுக்கான தேர்தல்.

   அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்து இருக்கிறேன் .உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே வந்திருக்கிற ஒருநாள் பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன் என்று கூறினார்.

    கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் தவெக விஜய் பரப்புரை மேற்க்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

   இந்த விவகாரத்தில் திமுக சதி இருப்பதாக தவெக மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

   சமீபத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தது நினைவு கூறத்தக்கதாகும்.