"அன்றைக்கே கரூரில் போட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?"  முதல்வரைக் குறிவைத்து மிரட்டல் பேச்சா? வேலூர் திமுக கவுன்சிலர் டிடா சரவணன் என அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்; போலீஸ் தேடுதல் வேட்டை!

"அன்றைக்கே கரூரில் போட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?"  முதல்வரைக் குறிவைத்து மிரட்டல் பேச்சா?  வேலூர் திமுக கவுன்சிலர் டிடா சரவணன் என அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்; போலீஸ் தேடுதல் வேட்டை!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை:27,

   முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை வளாகத்தில் திமுக நிர்வாகி ஒருவர் பேசியதாக வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 "அன்றைக்கே கரூரில் அவனைப் போட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?" என்று ஒருவர் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சு தமிழக முதல்வரை  குறிவைத்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புழல் சிறை வாசலில் என்ன நடந்தது?

தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகள் தொடர்பாக சுமார் ரூ.100 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் நீதிமன்றக் காவல் விதித்ததைத் தொடர்ந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

   அப்போது அங்கு திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் கோஷமிட்டதாகவும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, போலீஸாரிடம் ஒருமையில் பேசினார். சீருடையில் இருந்த காவல் அதிகாரியை நோக்கி அவமதிக்கும் தொனியில் மிரட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான சமூக வலைதளங்களில் வெளியானது.

வேலூர் மாநகராட்சிக் கவுன்சிலர் டிடா சரவணனா?

  புழல் சிறை அருகே கூடிய திமுகவினரில் சரவணன் என்பவரும் ஒருவர். இவர் வேலூர் மாநகராட்சியின் கவுன்சிலராக உள்ளார். இவர் போலீஸ் வேனில் இருந்த அன்பில் மகேஸை நோக்கி அன்றைக்கே கரூரில் போட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா என்று பல தடவை சவுண்டு விட்டார்.

   சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசிய நபர் வேலூர் மாநகராட்சியின் 12-வது வார்டு திமுக கவுன்சிலர் டிடா சரவணன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் திமுகவின் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  இந்த விவகாரத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புழல் போலீஸார் அவரைத் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவது சரியா?

அன்பில் மகேஷ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டியவை. அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கும்.

  அதேநேரத்தில், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள சட்டரீதியான வழிகள் இருக்கும்போது, வன்முறையை நினைவூட்டும் வகையிலான பேச்சுகள் எழுந்ததாகக் கூறப்படுவது கவலைக்குரியதாகும்.

"கரூரிலேயே போட்டிருந்தால்" என்ற வார்த்தைகள் உண்மையாகப் அது யாரைக் குறித்தது, எந்தச் சூழலில் கூறப்பட்டது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு அதன் தன்மை உள்ளதா என்பதைக் காவல்துறை விசாரிக்க வேண்டும்.

   ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ, அவர் கைது செய்யப்பட்டாலோ, விசாரணையை எதிர்கொள்வதற்கான சட்ட உரிமையை அவர் பயன்படுத்தலாம். ஆனால் விசாரணை அமைப்புகளை மிரட்டுவது, காவல்துறையினரை அவமதிப்பது அல்லது வன்முறையை ஆதரிப்பதாகப் பொருள்படும் கருத்துகளை வெளியிடுவது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல.

கட்சித் தலைமையின் பொறுப்பு என்ன?

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கட்சித் தலைமை தனது விளக்கத்தை அளிக்கலாம்; கைது நடவடிக்கை தவறானது எனக் கருதினால் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதற்கு ஒத்துழைப்பதும், தொண்டர்கள் சட்டத்தின் வரம்புக்குள் நடந்து கொள்வதை உறுதி செய்வதும் அரசியல் தலைமையின் பொறுப்பாகும்.

   அன்பில் மகேஷ் மீதான வழக்கின் உண்மைத் தன்மையை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதேபோல், புழல் சிறை வளாகத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும்.

  வன்முறையை நினைவூட்டும் பேச்சா, அரசியல் ஆவேசமா?

அரசியல் கருத்து வேறுபாடுகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், ஒருவருக்கு எதிராக வன்முறை நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற பொருள்படும் பேச்சுகள் சாதாரணமானவையாகக் கருதப்படக் கூடாது.

  குறிப்பாக, பொதுப்பொறுப்பில் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.