தீபாவளி போனஸ் 20% வரை! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு 2.60 லட்சம் 'சி', 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பலன்!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
சென்னை:27,
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி', 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025௹26ஆம் ஆண்டுக்கான தீபாவளி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதம் வரை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரத் துறை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு பயனளிக்கும்.
யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியமும், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத சில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியமும், 1.67 சதவீதம் கருணைத் தொகையும் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.
தகுதியுடைய நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும்.
அரசின் செலவு எவ்வளவு?
இந்த அறிவிப்பின் மூலம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,60,497 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.367.20 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
மேலும், பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான அறிவிப்புகள் தனியாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin
