திருப்பத்தூரில் பெண்கள் குத்தாட்டம்! பிறந்த நாள் நிகழ்ச்சியில் பரபரப்பு!

 

ஆர்.ரமேஷ்,

 வேலூர் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் டி.கே.மோகன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று சண்ட மேளம் முழங்க கொண்டாடப்பட்டது.

  ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதில் உள்ள டி.கே.எம். அலுவலகத்திலும் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண மண்டபமும் ஆட்டம் பாட்டம் என அமர்களப்பட்டது.

  முன்னதாக பெண்கள் மேள இசைக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டனர்.

  டி.கே.மோகன் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது அவர் பலருக்கு நல திட்ட உதவிகவழங்கினார்.

  பின்னர் அவர், அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர், அரசியல்வாதிகள், நீதித்துறையினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டினார்.

  அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

   திமுகவில் அண்ணாதுரைக்கு பதவி!  

  திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல சமூக சேவகராக இருந்து வருபவர் எ.பி.அண்ணாதுரை. திமுகவின் கடைகோடி உறூப்பினராக இருந்து படிப்படியாக பணியாற்றியவர்.

  அதன் பேரில் கட்சி தலைமை அவருக்கு திமுக தொண்டர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் பதவி வழங்கியிருக்கிறது.

  இது குறித்த அறிவாலயத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.