குஷ்பு ஏற்றிய வித்தியாசமான பா.ஜ.க.கொடி!

ஆர்.ராஜேஷ்குமார்,
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாற்றிய பா.ஜ.க கொடியை தலைகீழாக ஏற்றி சிரிப்புக்குள்ளானார்.
குஷ்பு ஏற்றிய வித்தியாசமான பா.ஜ.க.கொடி!
பா.ஜ.க.வின் 42 வது ஆண்டு விழா தின நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை குஷ்பு தலைகீழாக ஏற்றினார்.
நேற்று இதற்கான விழா மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள 2 இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்துகொண்டார்.
அப்போது வடக்கு போக் சாலை நரசிம்மன் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை குஷ்பு ஏற்றிவைத்த போது அவர் கொடியை தலைகீழாக ஏற்றிவைத்து விட்டார்.
கொடியை ஏற்றும்போதே குஷ்பு அதை கவனிக்கவில்லை. பந்தாவாக கொடியை ஏற்றிவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார்.
சுதாரித்துக் கொண்ட நிர்வாகிகள் கொடியை கீழிறக்கிய பின்னர் சரி செய்தார்கள்.