இராசாயன கழிவுகளை பாலாற்றில் கலப்பவர்களுக்கு மெடல் கொடுப்பார்களோ?

இராசாயன கழிவுகளை பாலாற்றில் கலப்பவர்களுக்கு மெடல் கொடுப்பார்களோ?

ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் அருகே  மாசுகட்டுப்பாட்டு வாரிய மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளை சிறைபிடித்தும் பாலாற்று பாலத்தின் மீது தரையில் அமர்ந்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவு நீரானது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக இரவு நேரங்களில் பாலாற்றில் திறந்து  விடப்படுகிறது.

 இதனால்  வெள்ள நீரில்  தொடர்ந்து தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலந்து வெள்ளை நிற நுரை பொங்கி செல்கிறது.

  இதன் காரணமாக  பாலாற்று கரையோரம் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாழ்படுப்பட்டு வருகிறாது.

 நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் மாசடைந்து  செல்வதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள்.

 ஆனாலும் அவர்கள் வழக்கம் போல நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 

 இந்த நிலையில் பாலாற்றில் நுரை பொங்கி செல்லும் இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் தொல்காப்பியன் மற்றும் நீர்வளத்துறை உதவி அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

  இதனைத் தொடர்ந்து பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பினர் பாலாற்று பாலத்தின் மீது தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் இதற்கான தீர்வு காண்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி உறுதி அளித்ததால் காவல்துறையினர் போராட்டத்தை கைவிட கோரி பொதுமக்களை கலைந்தனர்.

 இராசாயன கழிவை பாலாற்று நீருடன் கலந்து வரும் தோல் ஷாப்புகாரர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை அந்த தோல் ஷாப்புகாரர்களுக்கு  மெடல் ஏதாவது கொடுத்து கவுரவிக்கபடுவார்களோ என்னமோ?