அரசு அமைக்கும் வாய்காலை தடுப்பதா? பொங்கி எழுந்த மக்கள்!
கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையம், கணபதி சுந்தர நாச்சியாபுரம் பகுதியில் அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால் ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பாக அப்பகுதி பெண்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கணபதி சுந்நரநாச்சியார்புரம் பஞ்சாயத்து, நந்தவனத் தெரு பகுதியில் 70க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு வாய்கால் மற்றும் அடிப்படை வசதி கிடையாது. நீண்ட நாட்களாக போராடி அரசு அதிகாரியிடம் வாய்கால் வசதி செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாய்கால் அமைப்பதற்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள சில நபர்கள் கட்டக்கூடாது என்று கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாய்கால் இல்லாத நிலையில் வீட்டுக்கு முன்பாக கழிவு நீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தபோது அதிகாரிகள் இல்லாததால் ஊராட்சி மன்ற வாசலில் இரண்டு மணி நேரமாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் வராத காரணத்தினால் அங்குள்ள மேனேஜரிடம் மனுவை கொடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

admin
