மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டுமாம்!
ஜி.கே.சேகரன்,
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளில் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் வேளாண் கிடங்கு பணியில் நேரடியாக வருவாய்த்துறை ஆய்வாளர்களை ஈடுபடுத்துவதை ரத்து செய்து அத்துறை சம்பந்தமான அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும் கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு உச்சவரம்பினை 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் வருவாய்த்துறை பேரிடர்துறை கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்.
வருவாய் பேரிடர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவில் கலைக்கப்பட்ட 20 துணை ஆட்சியர் பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் ஒருங்கிணைந்த முது நிலையை நிர்ணயம் செய்து நீதிமன்ற தீர்ப்புக்குட்பட்டு தெளிவான சுற்றிக்கையை வெளியிட வேண்டும்.
அரசு முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணும் நோக்கில் துணை வட்டாட்ச்சியர்களை நியமனம் செய்திட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்பாட்டத்தில் மாநிலதுணை பொதுசெயலாளர் ஜோஷி,மாவட்ட செயலாளர் தீனதயாளன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

admin
