கடனை திருப்பி கொடுக்கவில்லை என பொய் சொல்லாததால் இரண்டு குழந்தைகள் கொலை!

கு.அசோக்,
வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை என்று தனது மனைவியிடம் பொய் சொல்ல சொன்ன நண்பரின் கோரிக்கை ஏற்காததால் ஆத்திரன். சம்மமந்தப்பட்டவரின் இரண்டு குழந்தைகளை கொன்று வீசியிருக்கிறான் ஒரு கொடூரன். இதனால் இரண்டு மாவட்ட போலிசார் அலார்ட் செய்யப்பட்டு கொலையாளி பிடிபட்டான்.
ஆம்பூர் அருகே நண்பனின் 2 ஆண் குழந்தைகளை அழைத்துச்சென்று, கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது. ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ் இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச்சென்று திண்பண்டங்கள் வாங்கி தருவது வழக்கம், இந்நிலையில் அதே போல் வசந்த் நேற்று மாலை வசந்த் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து இரவு வெகு நேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால் அச்சமடைந்த குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர்.
அப்போது, காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம். சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விரைந்தனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்றனர்.
ஏரிப்பட்டி பகுதியில் உள்ள செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக கிடந்த இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து, குழந்தைகளை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று கொலை செய்த வசந்த் என்பவரை கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர்.
நண்பர்களான யோகராஜிம், வசந்துக்கு இடைய பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. வசந்த் யோகராஜிக்கு ரூ.14,000/கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ரூ.7 ஆயிரத்தை திரும்பவும் பெற்றுள்ளார். ஆனால் பணம் திரும்ப பெற்றதை வசந்த் தன்னுடைய புது மனைவியிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
இதனால் எழுந்த பிரச்சனையில் வசந்தின் மனைவி கோபித்துக்கொண்டு காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஆகவே அவரை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக தமது நண்பர் யோகாராஜை நாடிய வசந்த், நீ பணம் இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என்று என் மனைவியிடம் சொல், அவளை நான் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறேன் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு யோகராஜ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வசந்த் யோகராஜின் குழந்தைகளை கொன்று வீசினார் என்று போலீஸ் விசாரணையில் வசந்த் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.