ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுகிறது! உதயநிதி கேள்விக்கு நயினார் பதில்!

ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுகிறது! உதயநிதி கேள்விக்கு நயினார் பதில்!

ஜி.குலசேகரன்,

அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென உதயநிதி சொல்வது ஆடு நனைகிறதே என கவலைப்படுவதை போல் உள்ளது. கேவிக்குப்பத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

   வேலூர்மாவட்டம் கேவிக்குப்பம் பேருந்து நிலையத்தில்  தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டமானது மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் தசரதன் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி உள்ளிட்டோர் திரளானோர் கலந்துகொண்டனர்,

  பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியின் போது, விஜய் பாஜகவின் பி டீம் என பரவலாக கூறப்படுகிறது குறித்த கேள்விக்கு  விஜய் பிஜேபியின் பி டீம் என்ற வதந்தியை திமுகவினர் பரப்பி விடுகிறார்கள் ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைத்து கோயபல்ஸ் தத்துவத்தை கடைபிடிப்பது திமுகவின் வாடிக்கை.

  செங்கோட்டையன் அவர்கள் விஜய் கட்சியில் சேரும் போது சேகர்பாபு அவர்களை சந்தித்து விட்டு தான் சென்றார்.    ¢  இதனால் விஜய் திமுக வின் பீ டீமா அல்லது பாஜக வின் பி டீமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

   காங்கிரஸ் கட்சி விஜய்  கட்சியுடன் சேர உள்ளது என நீங்கள் பேசி இருப்பது குறித்த கேள்விக்குவிஜய்  காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசினாரா என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

 பின்னர் இது குறித்து முழுமையாக தெரியவரும் என்றார்.

  பாஜகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது குறித்த கேள்விக்குஒரு பழமொழி உண்டு ஆடு நினைகிறதே என்று யாரோ கவலைப்பட்டது போல் உள்ளதுஅதிமுக, திமுக எதிரி கட்சி அண்ணா திமுகவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இவர்களுக்கு என்ன வந்தது.

  அதிமுகவுடன் கூட்டணி என்பது இன்று வந்ததில்லை புரட்சித்தலைவி அம்மாவுடன் இருக்கும்போதே வந்தது95ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததே இல்லையா இவர்களை வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்.

   திமுக மக்கள் செல்வாக்கோடு என்றும்  ஆட்சிக்கு வந்ததில்லை. விஜய் எம்ஜிஆர் உடன் ஒப்பிடுவது குறித்த கேள்விக்கு எம்ஜிஆர் ரோடு யாரையும்  ஒப்பிட முடியாது என்றார்.