ஊசிமணியை பார்த்ததும் பேருந்தில் ஏற விடாமல் தடுத்த நடத்துனர்! சிறுவர்கள் பரிதாபம்! தீர்வு தந்த செய்தியாளர்!!
ஆர்.ரமேஷ்,
நரிக்குறவர் இன மக்கள் என்பதால் பேருந்தில் ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரிடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வி எழுப்பியதால் தீர்வு கிட்டியது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு அரசு பேருந்து சென்று வருகிறது.
இந்நிலையில் பொங்கல் திருவிழா என்பதால் அதிகளவில் மக்கள் ஏலகிரிமலைக்கு வந்தனர்.
அப்படியிருக்க ஊசி மணிகளை விற்பனை செய்வதற்காக நரிக்குறவர் இன வியாபாரிகள் பொன்னேரி பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல முற்பட்டனர்.
அந்த வகையில் மூன்று சிறுவர்கள் கையில் ஊசி மணியுடன் பேருந்தில் பயணிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு அரசு பேருந்து வந்தது.
அதில் ஏறி செல்ல சிறுவர்கள் முற்பட்ட போது அவர்களை நடத்துனர் பேருந்தில் ஏற விடாமல் தடுத்ததுடன், பேருந்துக்கு விசில் கொடுத்தார். தங்களை பேருந்தில் ஏற்றிச்செல்ல மறுக்கப்பட்டதால் அந்த சிறார்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சிறார்களை பேருந்தில் ஏற்றாமல் சென்றதை அறிந்த நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் செந்தில்குமார் என்பவர் பேருந்தை பின் தொடர்ந்து சென்று நடத்துனரிடம் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் மூன்று சிறுவர்களையும் நடத்துனர் பேருந்தில் ஏற்றிச்சென்றார்.
அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனரின் சம்பவம் பேருந்தில் பயணித்த பொதுமக்களிடையே பெரும் அருவருப்பை ஏற்படுத்தியது.
இந்த பாகுபாடு செயலை கண்டித்து பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பலரின் அவா?.

admin
