நடந்து சென்று முதல்வர் திட்டத்துக்கான ஆய்வு செய்த கலெக்டர்!

கு.அசோக்,
இராணிப்பேட்டையில் உங்கள் ஊரில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறவிருக்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்க வருகின்ற 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10,000 இடங்களில் 13 அரசு துறைகளுடன் இணைந்து, பொது மக்களுக்கு 40 சேவைகள் வழங்குவதுடன் கலைஞர் உரிமை தொகைக்கான முகாமும் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான பணிகள் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் வருவாய் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று முகாமில் நடைபெறும் திட்டங்கள், பயன்கள் குறித்தும், விடுபட்ட மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்து எங்கு முகாம் நடைபெறுகிறது. என்னென்ன திட்டங்கள் குறித்து விண்ணப்பத்தை வழங்கி தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இதில் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேம்புலியம்மன் கோவில் தெருவில் வீடு வீடாக உங்கள் ஊரில் ஸ்டாலின் திட்ட நடைபெற்று வந்ததை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்துக் கொண்டு உங்களுக்கான பயனை பெற வேண்டும் என தெரிவித்தார்.
உடன் நகராட்சி ஆணையாளர் வட்டாட்சியர் ஆனந்தன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.