எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில் தாழ்த்தப்பட்ட தலைவர் மீது நடவடிக்கையா?

ஜி.கே.சேகரன்,
எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில் தாழ்த்தப்பட்ட தலைவரான என் மீது நடவடிக்கையா என்றும் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முழு விசாரணை நடத்தாமல் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்துள்ளனர் எனவும். பஞ்சாயத்து ராஜ்ய சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக முனிசாமி மற்றும் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி நிர்வாகத்தின் பொது நிதியை விதிமுறைகளுக்கு முரணாக செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை முறைகேடாக செலவினங்கள் செய்ததற்கான ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை எனக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி மற்றும் கிராம மக்கள் பலர் ஊராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி அளித்துள்ள பேட்டியில்,
தான் மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவராகவும் ஒரு முறை ஒன்றிய கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளேன்.
ஊராட்சி நிதியை எந்த விதிமுறைகளையும் மீறி தான் செலவினங்கள் செய்யவில்லை, எனவும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதாலும், கால்வாய் தொடர்பான பிரச்சனையில் எம்எல்ஏ வில்வநாதன் தனிநபர் ஒருவருக்காக ஆதரவாக செயல்பட்டார்.
பஞ்சாயத்து தீர்மானம் இல்லாமல் பஞ்சாயத்து ராஜ்யத்திற்கு எதிராக அங்கிருந்து புளிய மரத்தை அகற்றிய விவகாரத்தில் விதிமுறைகளை மீறி சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகள் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அந்த வழக்கினை வாபஸ் பெறுவதற்காகவும், தன்னை பழி வாங்கும் நோக்கில்
காழ்புணர்ச்சி காரணமாக எம்எல்ஏ வில்வநாதன் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தாமல் பஞ்சாயத்து ராஜ்ய சட்டத்திற்கு எதிராக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்துள்ளதாகவும் சொன்னார்.
மேலும், மக்களுக்காக உழைத்த தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டு தனக்கு நீதி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.