காரை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது!

காரை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது!

ஜி.குலசேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவரது உறவினரான பூபதி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (38) என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

   இதில் பூபதிக்கு, ஆதரவாக சண்முகம் என்பவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகம் நேற்று முன்தினம்  இரவு கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தார்.

  இதனை பார்த்த நந்தகுமார், காரை ஓட்டி சென்று சண்முகம் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.

  கார் வேகமாக மோத வருவதை பார்த்த சண்முகம், அங்கிருந்து சற்று விலகி தப்பிவிட்டார். இந்த சம்பவத்தில் சண்முகத்தின் இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. இதுகுறித்து சண்முகம் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.