திமுக பெண் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தேனியில் பரபரப்பு !

திமுக பேரூராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை செயல் அலுவலரிடம் ஒப்படைப்பு..
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி கெங்குவார்பட்டி பேரூராட்சியில் உள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த14 வார்டு உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து தலைவர் தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் சமீபத்தில் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் மன்ற கூட்டத்தை புறக்கணித்து கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக உள்ள தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானக் நகலை செயல் அலுவலரிடம் ஒப்படைத்து வெளிநடப்பு செய்துள்ளனர்.