அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மமக வினர்!

ஜி.கே.சேகரன்,
காலாவதியான சுங்கசாவடிகளை மூட கோரியும் சுங்கசாவடிகள் அதிகரிப்பதை கண்டித்தும் மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் கண்ணாடியை அவர்கள் உடைத்ததால் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியினை மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் ஏஜாஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நிஜாமுதீன்,ஷாபுதீன் உள்ளிட்டோரும், மனித நேய மக்கள் கட்சியினரும்¢ பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் தமிழ்நாட்டில் சுங்கசாவடிகளின் எண்ணிகையை 70 ஆக உயர்த்தியதை கண்டித்தும் சுங்கக்கட்டணம் 7 விழுக்காடு உயர்த்தியதை கண்டித்தும் காலாவதியான சுங்கசாவடிகளை மூட கோரி கோஷங்களை எழுப்பினார்கள் அப்போது அரசு பேருந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பதட்ட நிலை காணப்பட்டது.