கெஜ்ரிவால் இன்று ராஜினாமா!அவரது மனைவி அடுத்த முதல்வரா?

ம.பா.கெஜராஜ்,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ யால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில் அவர் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருக்க அவர் இன்று டெல்லி துணைநிலை ஆளுநரை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
கடந்த மார்ச் மாதம் 21 ம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சிபிஐ யும் அவரை கைது செய்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த 13ம் தேதி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனை வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில், 'முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது; ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது' என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்தது. இதனால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
எனவே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அடுத்த 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நேர்மையானவன் என மக்கள் தனக்கு சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பேன் என்றும் நேற்று முன் தினம் அறிவித்தார்.
இதனிடையே டெல்லி ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. ஆளுநரை நாளை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அளிப்பார் என கூறப்படுகிறது.
டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியில் அமர கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அல்லது அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் ஆகியோரில் ஒருவர் அடுத்த முதல்வராகும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.