கபடி கபடி கபடி! பரிசுகள் வென்ற அணிகள்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையம் ஸ்ரீ.பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு 61 வது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கபடி கழக மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சுப்பிரமணி ராஜா தலைமை தாங்கினார். பிஏசிஆர் விளையாட்டு மன்ற பொருளாளர் டாக்டர் ராம் சிங் ஐபிடிஜி, அலையன்ஸ் கிளப் சங்கர சுப்பிரமணியம், தொழிலதிபர் டைகர் சம்சுதீன், விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கனி முத்து குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மாவட்ட கபடி கழகத் துணைத் தலைவர் விவேகானந்தன், ராஜபாளையம் டவுன் லயன்ஸ் கிளப் பிரசிடெண்ட் எம்எஸ்ஆர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பி ஏ சி ராமசாமி ராஜா நினைவு சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசை ஆசை கபடி குழு மம்சாபுரம் அணியினர் பெற்றனர்..
இரண்டாம் பரிசு பி ஆர் ராமசுப்பிரமணிய ராஜா சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசை மீனாட்சிபுரம் செவன் லயன்ஸ் கபடி குழு பெற்று சென்றது.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை அடையார் ஆனந்த பவன் நிறுவனர் கே டி திருப்பதி ராஜா, முத்துலட்சுமி அம்மாள் நினைவாக சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழு பெற்றது. இரண்டாம் பரிசு ஸ்ரீமதி சிட்டம்மாள் நினைவு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசை ஆர் சி குயின் கபடி குழு மீனாட்சிபுரம் பெற்றது நிறைவாக நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் நன்றி கூறினார்.