அரசு நல திட்டங்களை அறிய கண்காட்சி! அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்!!

கு.அசோக்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆ£. காந்தி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்த மக்களை தேடி மருத்துவம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி சமூக நலன் மற்றும் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக தேசிய வாக்காளர் தினம் உள்ளிட்ட பல்வேறு துறை கொண்ட அரங்கு மற்றும் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக வருகை தந்து புகைப்பட கண்காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அரங்கினை பார்வையிட்டார்.
மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வைக்கப்பட்ட பல்வேறு துறை கொண்ட அரங்கு மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்து அமைப்பப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக பார்வையிட்டு அரசின் செயல்பாடுகள் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து பயன்பெறுவதற்காக இக்கண்காட்சி ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது நிகழ்வின் மாவட்ட ஆட்சியர் வளர்மதி நகர மன்ற தலைவர் சுஜாதாவினோத் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.