சொர்க்கமே என்றாலும் அது வேலூரை போல் வருமா!

ம.பா.கெஜராஜ், 

சொர்க்கமே என்றாலும் அது வேலூரைப் போல் வருமா என்று பாட்டு பாடி  தண்ணீரில் மிதந்து செல்கின்றன்ர் பொதுமக்கள். முக்கியஸ்தர்களின் ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் பல்வேறு இன்னறுகளை சந்தித்து வருகின்றனர் 

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாதபடிக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. டூவீலர்கள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்து நிற்கின்றன.

  இதற்கு காரணம் ஒரு பஸ் கம்பெனியும், சில அரசியல் தலைகளும் நீர் பிடிப்பு கால்வாயை ஆட்டையை போட்டு வைத்திருப்பதே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

 இவர்கள் செய்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் ஒரு சொட்டு தண்ணீரும் மேற்படி இடத்தில் தேங்காது. மக்களுக்கு சிரமும் ஏற்படாது.

  இந்த குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகள் திருப்பத்தூர், பெங்களூருவிலிருந்து வரும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சர்வீஸ் லைனில் இறங்கி புது பேருந்து நிலையத்துக்கு திரும்பும் இடத்தில் உள்ளது.

   சத்தியமாக அந்த ஆக்கிரமிப்பை மாநகராட்சி அகற்ற வாய்ப்பில்லை. என்ன செய்வது இதற்கும் நீதிமன்றம் தான் நாடவேண்டும் போலிருக்கு.