“லியோ” திரைப்பட டிரெய்லரை வானதி தொலைகாட்சியில் பார்த்தாரா?

“லியோ” திரைப்பட டிரெய்லரை வானதி தொலைகாட்சியில் பார்த்தாரா?

 ஜி.சாந்தகுமார், 

 இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படத்தின் டிரெய்ல வெளியானது. அதை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்துக்கொண்டிருக்க, மேடம் அவரது ரசிகரா அல்லது அரசியல் காரணமா என்று அமர்களப்பட்டுக் கொண்டிருக்கிறது களம்.

 ஆயுத பூஜை ரிலீசுக்கு காத்திருக்கும் 'லியோ' திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று இரவு வெளியானது.

 அதனையொட்டி கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆயிரக்கணக்காக அங்கு வந்த விஜய் ரசிகர்கள் தியேட்டரை கபளிகரம் செய்து விட்டனர்.

 இது ஒருபக்கம் இருக்க தொலைக்காட்சியில் வானதி சீனிவாசன் லியோ டிரெய்லரை பார்ப்பது போல போட்டோவை வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

  லியோ ரிலீஸ் தொடர்பாக  சில பல பிரச்சனைகள் உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள்  திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில், விஜய் ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும், விஜய்க்கு தாங்கள் ஆதரவாக இருப்பதை போல வெளிக்காட்டிக்கொள்ள வானதி சீனிவாசனை இப்படி ஸ்டென்ட் அடிப்பதற்காக பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 தமிழகத்தில் தன்னந்தனியாக தவிக்கு பாஜகவுக்கு இது கைகொடுக்குமா என்று ஒரு.......முயற்சிதாங்க.

 நாம் விசாரித்த வகையில் லியோ படத்தில் டிரையிலர் வெளியிடப்பட்ட தியேட்டருக்கு வெளியே தொலைகாட்சிகளில் லைவ் போடப்பட்டது. ஆனால் தனியார் தொலைகாட்சிகளில் அது ஒளிபரப்பப்படவில்லை. ஆன் லைனில் வேண்டுமானால் வெளியிடப்பட்டது.