டேன்சிங் டீச்சர்" கலகலப்பு மாணவர்கள்!

டேன்சிங் டீச்சர்" கலகலப்பு மாணவர்கள்!

ஜி.கே.சேகரன்,

  மார்கழி திங்கள் அல்லவா என்கிற பாடலுக்கு சூப்பர் நடனம் ஆடினார் அணைக்கட்டு ஆசிரியை.

  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். 

 அப்போது மாணவன் ஒருவன் மேடையில் "மார்கழி திங்கள் அல்லவா" என்ற பாடலுக்கு நடனமாடி கொண்டிருக்கும் போது, ஆர்வமிகுதி ஏற்பட்ட ஒரு ஆசிரியை மாணவனுடன் சேர்ந்து நடனமாடிய அனைவரையும் கலகலப்பூடினார்.

 அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை திருமதி செசிலா சொர்ண குமாரி என்பவரின் அந்த நடன காட்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும் கலை நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி கலக்கிய தமிழ் ஆசிரியை செசிலா சொர்ண குமாரிக்கு சக ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.