9,796 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்.... திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

R.Ramesh,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2024-25-ஆம் ஆண்டிற்கான 157 மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
இந்த நிகழ்வு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2024-25-ஆம் ஆண்டிற்கு 56 அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4,533 மாணவர்கள் 5,263 மாணவியர்கள் என மொத்தம் 9,796 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் நடைபெற்ற விழாவில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் தெரிவித்தயாதெனில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துகின்ற திட்டங்கள் அனைத்து ஏழை எளிய மக்கள் பயனடைகிறார்கள்.
நீங்கள் அனைவரும் வருங்காலங்களில் நல்லமுறையில் படிக்க வேண்டும். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கு செல்லுகின்ற பொழுது மாதம் ரூ.1000/- உங்களுடை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ஆயிர ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை கோயம்பத்தூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள். இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ரூ.401 கோடி ஆகும். இதே போன்று நம்முடைய தமிழ்நாட்டை இந்தியவிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
நமது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்திக்கொண்டிருக்கின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள் தெரிவித்தயாதெனில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் நிகழ்ச்சியாக ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜோலார்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெறுகிறது.
அதனால் தான் விலையில்லா மிதிவண்டி முதன்முதலாக இப்பகுதியில் தொடக்கி வைத்து தொடர்ச்சியாக நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் படிப்படியாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எந்தத் திட்டங்கள் நல்ல திட்டங்களும் நடைமுறைப்படுத்தி வந்தாரோ அதையெல்லாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைமுறை படுத்தி நன்றாக படிக்கின்ற மாணவ செல்வங்களுக்கு தான் அதிகமான மருத்துவம் கல்வித்துறையிலும் பயன்பெறுகின்றனர்.
கடந்த மூன்றாண்டு காலங்களில் மக்களை தேடி மருத்துவத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அடி எடுத்து வைக்கின்ற நிலையில் நமது மாவட்டத்தில் மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அனைத்து அரசு திட்டங்களையும் அனைவரும் பயன்பெற வேண்டும்.
மக்களை தேடி முதல்வர் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வரவில்லை என்றாலும் பல தொகுதியில் உள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அவர் வந்ததாக கருதி நேரடியாக எந்தப் பணி நடந்தாலும் நாம் ஈடுபடுவோம், ஈடுபட்டு கடை கோடி மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய முக்கிய நோக்கம்.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசு முழுமையாக நடவடிக்கை எடுத்து மக்கள் பிரச்சனையை தீர்த்துக் கொடுக்கின்ற அரசிற்கு எப்பொழுதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் உடல் உறுதியாக வேண்டும் அதன் மூலமாக உள்ளம் உறுதியாக வேண்டும், உடலும் உள்ளமும் உறுதியானால் அவர்களுடைய எதிர்கால கல்வி உறுதியாக இருக்கும் என்ற உயர்ந்த எண்ணத்தில் குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட திட்டம்தான் இந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்.
நமது மாவட்டத்தில் 56 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றன. அவற்றில் 9,796 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர். குறிப்பாக 4,533 மாணவர்களை விட 5,263 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். இந்த திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிகு திட்டத்தின் கீழ் உருவாகின்ற இத்திட்டத்தை மக்களும் பயனாளிகளும் மாணவ செல்வங்களும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு.முனிசுப்ராயன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.அமுதன், நகர மன்ற தலைவர் திருமதி.காவியாவிக்டர், ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சத்யாசதீஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.