நான் சாகவில்லை! சொக்கத் தங்கம் ஜிவல்லரி புகழ் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ!

நான் சாகவில்லை! சொக்கத் தங்கம் ஜிவல்லரி புகழ் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ!

வி.டி.வித்யாசாகர்,

  ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். தெலுங்கு சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ், தமிழ், மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  இவர், தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடித்த 'சாமி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சாதிய வில்லனாக மிரட்டியிருந்தார் கோட்டா சீனிவாச ராவ். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் 'திருப்பாச்சி', 'கோ', 'சகுனி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

  இந்நிலையில் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலை குறித்து தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதை பார்த்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியானார்கள். பின்னர் அது உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டா சீனிவாசராவ் வெளியிட்ட வீடியோவில், "நான் உயிருடன் இருக்கிறேன். நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

  எனது உடல்நிலை குறித்து சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம். உடல்நிலை குறித்து பரவிய தகவலை உண்மை என்று நம்பி 50-க்கு மேற்பட்டோர் போன் செய்து விசாரித்தனர். போலீசாரும் எனது வீட்டுக்கு வந்தனர்.

   பணம் சம்பாதிக்க கோடிக்கணக்கான வழிகள் இருக்கிறது. இதுபோன்ற பொய் தகவல்களை பரப்ப வேண்டாம்'' இது வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று பேசியிருக்கிறார்.