ஒத்தை ஓட்டு பெற்ற கோவை பா.ஜ.க.வேட்பாளர்!

ஒத்தை ஓட்டு பெற்ற கோவை பா.ஜ.க.வேட்பாளர்!

  ஆர்.எஸ்.சங்கர மூர்த்தி,

   "ஒத்த ஓட்டு பாஜக" என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

  ஒரே ஒரு ஓட்டைபெற்று நாடு முழுவதும் பிரபலம் அடைந்த பாஜக வேட்பாளரே இந்த ஹேஸ்டேக்குக்கு காரணம்.

 கோவை, குருடம்பாளையம் ஊராட்சி, 9-வது வார்டு இடைத் தேர்தலில், பாஜக வேட்பாளர் கார்த்திக் போட்டியிட்டார்.

 இன்று காலை அவர் வாக்கு எண்ணும் மையத்துக்கு சும்மா பந்தாவாக கட்சித்துணை அணிந்து தம் சகாக்களுடன் வந்தார்.

 பெட்டியை பிரித்து எண்ணிய போது மேற்படி பா.ஜ.க.வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு ஓட்டைமட்டுமே பெற்றிருப்பது தெரிய வந்தது.

  இதனால் ஷேம் ஆன கார்த்திக் வந்த வேகத்தில் எகிறீவிட்டார்.

 குறிப்பு:- ஒத்தை ஓட்டு கார்த்திக்கின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருக்கிறார்கள், மேலும் தன்னுடன் பக்கவாத்தியங்கள் பலரை வைத்துள்ளார். இருந்தும் கூட எவரும் அவருக்கு ஓட்டு போடவில்லை.

 அந்த ஒத்தை ஓட்டூ கூட அவரே குத்திக் கொண்டதுப்பா!!!

 இந்நிலையில் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டில் நடந்த இடைதேர்தலில் அருள்ராஜ்(திமுக) 387 வாக்கு பெற்று வெற்றி .