உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஒய்வு! யு.யு.லலித் புதிய தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஒய்வு! யு.யு.லலித் புதிய தலைமை நீதிபதி!

 ம.பா.கெஜராஜ்,

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி பதவி ஏற்ற என்.வி.ரமணா, வருகின்ற 26-ந் தேதி பணி நிறைவு பெறுகிறார். இவர் பணி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது. அப்படியிருக்க புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று பரிந்துரை செய்தார்.

 அதற்கான கடிதத்தை அவர் மத்திய அரசிடம் வழங்கி உள்ளார். புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிற யு.யு.லலித், 27-ந் தேதி பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

 அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.   இருப்பினும் அவர் 3 மாதங்களுக்கும் குறைவாகவே பதவியில் இருப்பார். நவம்பர் 8-ந் தேதி அவர் ஓய்வு பெறுவார்.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள யு.யு.லலித் 1957-ம் ஆண்டு, நவம்பர் 9-ந் தேதி பிறந்தவர். 1985-ம் ஆண்டு வரை மும்பை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

  1986-ம் ஆண்டு டெல்லியில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். 2004-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்

   மூத்த வழகறிஞராஞ்க அங்கீகாரம் பெற்றார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2'ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.   

  உச்ச நீதிமன்றத்தின் சட்ட உதவி குழுவின் உறுப்பினராக இரு முறை பதவி வகித்துள்ளார். 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 'முத்தலாக்' சொல்லி முஸ்லிம்கள் விவாகரத்து செய்யும் முறை செல்லாது என தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி யு.யு.லலித்தும் அங்கம் வகித்திருந்தார். இவரது தலைமையிலான அமர்வுதான், கேரளாவில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்மநாபசாமி கோவில் நிர்வாக உரிமை, திருவிதாங்கூர் முன்னாள் அரச குடும்பத்துக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.

 ன்  குழந்தைகளின் உடலைத் தவறான நோக்கத்துடன் தொடுவதும், உடல்ரீதியான எந்தவொரு செயலில் ஈடுபடுவதும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7-ன்கீழ் பாலியல் வன்கொடுமைதான் என தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு நீதிபதி யு.யு.லலித் அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆக அவர் தலைமை நீதிபதியாக குறைந்த காலம் பணியாற்ற இருந்தாலும் பரபரப்பான தீர்ப்புகள் பலவற்றை பார்க்கலாம்.