தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

 தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

 ஜி.சாந்தகுமார்,

 வரும் ஜூன் மாத இறுதியுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த தலைமைச் செயலாளார் யார் என்கிற எதிர்பார்ப்பு பலரிலும் எழுந்துள்ளது.

 மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் இறையன்புவுக்கு தலைமை செயலாளர் பொறுப்பை வழங்கினார்.

 அப்படியிருக்க, முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சுமார் இரண்டு ஆண்டுகள் அரசு அதிகாரிகள், அலுவலர்களை இறையன்பு சரியாக வழிநடத்தினார் என்பதை எவரும் மறுக்க இயலாது. இந்நிலையில் இறையன்பு ஓய்வு பெற உள்ளார்.

  இருப்பினும் அவருக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவியை வழங்க முடிவெடுத்து அது குறித்து ஆளுநருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

 இந்நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, ஜிதேந்திரநாத் ஸ்வைன், ஹன்ஸ்ராஜ் வர்மா, விக்ரம் கபூர், பிரதீப் யாதவ், தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்டோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.