டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கு மூடியில் ஓட்டை! சிரஞ்சி மூலம் உறிஞ்சுவதாக புகார்!

டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கு மூடியில் ஓட்டை! சிரஞ்சி மூலம் உறிஞ்சுவதாக புகார்!

 ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய ஒயின் மது பாட்டிலின்  மூடியில் துளை போடபட்டிருந்ததால் மதுபிரியர் அதிர்ச்சி ஊசி மூலம் போலி மதுபானம் விற்கப்படுகிறதா  என மதுபிரியர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல். இவர் (22:10:25) அன்று மாலை நேரத்தில்  விஜிலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மதுபாட்டில் வாங்க சென்றுள்ளார்.

  அப்போது அவர் வாங்கிய ஒயின் மது பாட்டிலின் மேல் மூடியில் துளை போட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

  அரசு மது கடையில் விற்கப்படும் மது பாட்டில்களில் ஊசி செலுத்தப்பட்டு போலி மதுபானம் விற்கப்படுகின்றதா என கேட்டு மதுக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனைத் தொடர்ந்து இளைஞர் நிர்மல் அரசு மதுபான கடையில் வாங்கிய போலி மதுபாட்டிலை கையில் வைத்துக் கொண்டு அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

  இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்று ஏழைகளையும் மக்களை சுரண்டி வரும் இந்த அரசு போலி மதுபான பாட்டில்களை விற்று ஏழை எளிய மக்களை சீரழிக்கும் நோக்கில் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.