வட மாநில வாலிபரை தாக்கிய ஹாலோ பிரிக்ஸ் உரிமையாளர்!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் நெப்போலியன்.
இவர் மைக்காமேடு பகுதியில் மனோரஞ்சிதம் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில்,அவருடைய ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் இடத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் மாஞ்ஜே(25) என்பவர் ஒரு மாத காலமாக வேலை செய்து வந்துள்ளார்.
பின்னர் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு எதிரில் உள்ள மாது என்பவரின் மாட்டுப் பண்ணையில் அரவிந்த் மாஞ்ஜே வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நெப்போலியன் வடமாநில வாலிபர் வேலை செய்யும் மாட்டு பண்ணைக்கு நேரில் சென்று கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஹாலோ பிரிக்ஸ் உரிமையாளர் வடமாநில வாலிபரை தாக்கும் காட்சிகள் வைரலாகியுள்ள நிலையில் வடமாநில வாலிபரை தாக்கிய ஹாலோ பிரிக்ஸ் உரிமையாளர் மீது கடுமையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

admin
