உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை பார்க்கும் போலிசார்!

ஜி.சாந்தகுமார்,
1979ம் ஆண்டிலேயே 'ஆர்டர்லி' முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு தெரிவித்த போதிலும், போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும் பணியில், 10 ஆயிரம் போலீசார் வரை ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல் துறையில் காலி பணியிடங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே பணியில் உள்ளவர்களை உரிய இடத்தில் வைத்து வேலை வாங்க வேண்டும் என்று காவல் துறையினர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஏனெனில் தற்போது பணியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலும், 'அயல்பணி' என்ற அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 'ஆர்டர்லி'யாக எடுபிடி வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போலீஸ்காரர் ஒருவர், 2018ல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 'அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக எத்தனை போலீசார் பணியாற்றுகின்றனர். அதற்கான பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இதையடுத்து, அப்போது, தமிழக டி.ஜி.பி.,யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், .'தற்போது, ஆர்டர்லி முறை உள்ளதா? தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை பேர் ஆர்டர்லியாக பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கையை பட்டியலாக தரவும்' என, கோரியிருந்தார்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாக வெளியான செய்தியில், ருசியாக சமைக்கத் தெரியும் என்பதற்காகவே, அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். பாத்திரங்கள் கழுவுதல், துணிதுவைத்தல், உள்ளிட்ட வேலைகளையும் போலீசார் செய்து வருகின்றனர்.இவர்களுக்கு எளிதில் பதவி உயர்வு தரப்படுகிறதாம்.
இதை கணக்கெடுத்தால், 10 ஆயிரம் போலீசார் வரை ஆர்டர்லியாக பணியாற்றுவது தெரியும். சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற போலீஸ் அதிகாரியின் பெற்றோரை பராமரிக்க, 'ஆர்டர்லி' முறையில் பெண்போலீசார் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அதில் ஒரு பெண் போலீஸ், 'மப்டி'யில் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது, அவரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார். சமீபத்தில் இந்த சம்பவமும் நடந்தது.
அப்படியிருக்க ஆர்டலி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்!