பிரபல ரவுடி எம்எல்ஏ ராஜா வெட்டிக்கொலை! வேலூர் எஸ்பி நேரில் விசாரணை!

ஜி.கே.சேகரன்,
அரியூரில் பிரபல போக்கிளி ஆன எம்எல்ஏ ராஜா என்பவர் ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை.
வேலூர்மாவட்டம்,அரியூரில் பிரபல போக்கிளி ராஜ்குமார் என்ற ராஜா அரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் அரியூரிலேயே மடக்கி சரமாரியாக ராஜாவை வெட்டியது.
இதில் போக்கிளிராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல்துறையினருடன் சென்று சில இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்து, மாவட்ட முழுதும் வாகனத் தணிக்கைக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
அதன் பேரில் கணியம்பாடி அடுத்த வல்லம் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் வாகனத்தை அறிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர், காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை அடுத்து போலீசார் கார் டிரைவர் உட்பட நாலு பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜாவிற்கும் பிடிபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த நாலு பேருக்கும் சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது எம்எல்ஏ ராஜா இந்த பகுதியில் நான் தான் ரவுடி என்னிடம் பிரச்சனை செய்தால் உங்கள் நாலு பேரும் விரைவில் தீர்த்து கட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதனால் பயந்து போன நாலு பேரும் எம்எல்ஏ ராஜா தங்களை கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் அவரை முன்கூட்டியே தீர்த்து கட்டியதாக தெரிவித்துள்ளனர்.