அதிமுக நகர செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

அதிமுக நகர செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

க.பாலகுரு,

   தேனி மாவட்டம், தேனி அருகே சின்னமனூரில் உள்ள அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

   இதில்தேற்பட்ட  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தூக்கத்திலிருந்து எழுந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அங்கு நேரில் சென்றார்.

 முதற்கட்ட விசாரணையில்  முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.