முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெயரை கெடுக்கும் அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,

நகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் சரியாக செய்யாமல் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் ஆகியோரின் பெயரை கெடுக்கிறார்கள். வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் ஆவேச பேச்சு.

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் தொடங்கியவுடன் கடலூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

 அதன் பின்னர் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மக்களின் பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

 அப்போது 25 வார்டு நகர மன்ற உறுப்பினர் நாசிர்கான் பேசிய போது ஆற்றுமேடு பகுதியில் பாலம்  கட்டும் பணிகள் நடைபெறுகிறது.அங்குள்ள மின்வாரிய  டிரான்ஸ்பார்மர் அகற்ற வேண்டும் என்றுபலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.

  அதற்கு மின்வாரியதிற்¢க்கு பணம் செலுத்த வேண்டும். மின்வாரியத்திற்கு பணம் செலுத்தப் போவது பொதுப்பணித்துறையா அல்லது நகராட்சியா என்று இதுவரை யாரும் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை.

   சென்னாம்பேட்டை  கிளை ஆற்றில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பாதை மூடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு பள்ளிகள சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 25 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். அப்போது அவர்களுக்கு அந்தப் பாலத்தைக் கடந்து வருவதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

அங்கு பைப்புகள் வைத்து தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

  தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் என ஆட்சியாளர்கள் அனைவருடமும் நகரமன்ற தலைவர் நகராட்சிக்கு தேவையான நிதியை பெற்று தருகிறார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் திட்டங்களை முறையாக செயல்படுத்தாமலும்,

அந்தப் பணிகளை  செய்வதில் மிகவும் தாமதப்படுத்தி முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் என  அனைவரின் பெயரை கெடுத்து வருகிறார்கள்.

 மேற்படி நகர மன்ற உறுப்பினர் நாசிர்கான் மிகவும் ஆவேசமாக பேசியது சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.