குழந்தைகள் கூடமா? மதுக்கூடமா!
G.K.சேகரன்,
நாட்றம்பள்ளி அருகே பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்துவிழும் அபாயம் குடிகாரர்களின் கூடாரமாக மாறிய அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
திரும்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே மாமுடிமானப்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு அருகே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலைப் நீர்தேக்க தொட்டி கடந்து 2012-13-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குலசன்வட்டம், தழுகன்வட்டம், கவுண்டர்வட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்து சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.
எப்போது வேண்டுமானாலும் அவை இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. அதேபோல் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால் குடிபோதை ஆசாமிகள் அங்கன்வாடி மையத்தின் அருகே மது அருந்திவிட்டு மது பாட்டிலை அங்கேயே வீசி செல்கின்றனர்.
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால் அங்கன்வாடி மையம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்து தரவேண்டும் என அப்பகுதிமக்கள் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை இவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
