நண்பர்கள் டிரஸ்ட் - சி.எம்.சி. இணைந்து நடத்திய ரத்ததான முகாம்!

அ.கோகுல் சந்தோஷ்,
நண்பர்கள் டிரஸ்ட் மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை இணைந்து ரத்த தானம் முகாம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வேலூர் ஆர்.என்.பாளையம், சின்ன அல்லாபுரம், மெயின் ரோடு இக்ரா மெட்ரிகுலேஷன் பள்ளியில், நண்பர்கள் டிரஸ்ட் மற்றும் சி.எம்.சி .மருத்துவமனை இணைந்து இரத்தம் தானம் முகாம் நடத்தினர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் முக்தார் அஹ்மத் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞர் அணியினர்கள், தலைமை அலுவலக செயலாளர் ஹிபசத்துல்லா கான், மாநிலச் செயலாளர் அன்சர்கான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் முகமது தௌபிக், சையத் சித்தீக் மற்றும் மாணவர் அணியினர்கள் தலைமை அலுவலக செயலாளர் முகமது சமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், மாவட்ட செயலாளர் ஹாதிபாஷா, நகர செயலாளர் இலியாஸ், துணை நகர செயலாளர்கள் அப்துல்பாரி, ஜாபர்கான் முகமது அயாஸ், மற்றும் நண்பர்கள் டிரஸ்ட் நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.