207 அரசு பள்ளிகளை மூடியது தான் திமுக அரசின் சாதனை எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!
ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி 207 அரசு பள்ளிகளை மூடியது தான் திமுக அரசின் சாதனை பள்ளிகள் மூடப்பட்டுள்ளது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது - திருப்பத்தூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
திருப்பத்தூர்மாவட்டம், திருப்பத்தூரில் அனைத்து சங்க நிர்வாகிகள் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் கூட்டமானது அதிமுக பொதுசெயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்றது.
உடன் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, தம்பிதுரை உள்ளூர் நிர்வாகிகள் டிடிசி சங்கர் திரளான வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களும் பங்கேற்றனர்
பின்னர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன். இன்று காலை சுமார் 32 அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய பிரச்சனை குறித்து என்னுடைய கவணத்திற்கு கொண்டு வந்தார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பின்னர் இவை அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும். மேலும் உட்கட்சி விவகாரத்தை பகிரங்கமாக மேடையில் கேட்க கூடாது. கட்சி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அதிமுக ஆட்சியில் ஏரிகளை தூர்வாரினோம், மதகுகளையும் பலப்படுத்தினோம் விவசாயிகளுக்கு தேவையான நீர்களை வழங்கினோம் மேலும் எதாவது செய்ய வேண்டுமானால் மனுவாக கொடுங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம்.
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடியது தான் திமுகவின் சாதனை, பள்ளிகளை மூடுவதற்கு முன்பாக அதை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டு வேண்டிய விஷயம்.
ஏற்கனவே இயங்கி வந்த அரசு பள்ளி மூடுவது சரியில்லை, தமிழகத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக ஆட்சியில் நிறைய அரசு பள்ளிகளை ஏற்படுத்தினோம்.

அப்பொழுதுதான் அறிவுபூர்வமான மாணவர்களை உருவாக்க முடியும் என்ற ஏழை எளிய மாணவர்கள் அந்தப் பகுதியில் கல்வி கற்க வேண்டும் என அதிகமாக திறக்கப்பட்டது.
இந்த ஆட்சியில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமார் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
இது வருத்தமும் வேதனையும், அளிக்கிறது இதற்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு சட்ட ஒழுங்கும் அடியோடு சீர்கெட்டு விட்டது.
இதை எல்லா பொது கூட்டங்களிலும் பேசி வருகிறேன், தங்கம் வெள்ளி நிலவரம் வருவதை போல் பத்திரிகைகளில் கொலை நிலவரம் வருகிறது.
காவல்துறை மீது அச்சமில்லாததால் ரவுடி ராஜ்யம் நடக்கிறது, போதையால் கொலை கொள்ளை திருட்டு பாலியல் குற்றங்களும் நடக்கிறது.
தாயுமானவன் திட்டம் குறித்து நல்லதா கெட்டதா என எதிர்காலத்தில் தான் சொல்ல முடியும். முதல்வர் எல்லா திட்டங்களையும் துவங்குகிறார். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் ஏற்றுகொள்வார்கள்.
50 திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது, திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வேண்டும். பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகள் குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு நாங்கள் ஆறுகளை பாதுகாக்க நடந்தாய் வாழி காவேரி திட்டம் கொண்டு வந்தோம்.
எல்லா நீர் நிலைகளிலும் சுத்தம் செய்தால் கழிவுகளால் இல்லாம் நீர் சுத்தமாக கிடைக்கும். டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் தோன்றுவது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்னார் அவரிடமே கேளுங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறது. அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
இது ஜனநாயக நாடு யார் எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் எல்லாமே கட்சி மாறிமாறி இருக்கிறார் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். திமுகவில் சேர்ந்தார் அதே போல் மைத்ரேயனும் திமுகவில் சேர்ந்தார் இன்னும் தேர்தலுக்கு எட்டுமாதங்கள் இருக்கிறது இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என சொன்னார்.

admin
