திமுக எம் .எல். ஏ.வின் மகள் விபத்தில் சிக்கினார்!

திமுக எம் .எல். ஏ.வின் மகள் விபத்தில் சிக்கினார்!

  ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருப்பவரின் பெயர் க.தேவராஜ், இவரது மகள் பெயர் அருணாதேவி அவரது கணவர் பெயர் மோகன்ராஜ்.

 நேற்று மோகன்ராஜ் இவரது மனைவி அருணாதேவி ஆகியோர், இவரது சகோதரர் பிரபாகரன் தம்பதிக்குகுழந்தை பிரந்துள்ளதை தொடர்ந்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.

  அப்போது மோகன் ராஜின் தந்தை கண்ணன், தாய் கிருஷ்ணவேணி,, மற்றும் மகன் தர்ஷனேஷ், ஆகிய 5 பேர் வேலூர் தனியார் மருத்துவ மனைக்கு நேற்று காரில் சென்றனர்.

   பெங்களூரு -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அடுத்த கள்ளுக்குட்டை பகுதியில் மாலை 4.20 மணியளவில் சென்றபோது திடீரென முன் டயர் வெடித்து பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

  இதில் சிறுவன் தர்ஷனேஷ்க்கு எந்த காயமும் இல்லை. மற்ற 4 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். நாட்றம்பள்ளி போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பின்னர் தர்மபுரிக்கு சென்றனர்.