திருட்டு தனமாக பார்கள்!

திருட்டு தனமாக பார்கள்!

 வே.நெல்சன்,

 வேலூர், சென்னை, அரக்கோணம்  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,   ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்து7விட்டதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.

  இதனால் குடிமகன்கள் தவித்து வருகிறார்கள்.

 இது ஒருபுறம் இருக்க பார்களுக்கான உரிமம் தொடர்பான டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் எனவும், யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

 இந்நிலையில் சென்னை உள்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம், அந்தந்த மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 சட்ட ரீதியான விவகாரம் இப்படியிருக்க, திருட்டுதனமாக பல பார்கள் நடந்து வருகிறது. அதற்கு சம்மநப்பட்ட காவல் நிலையத்தினர் உரிய பாதுகாப்பு அளித்து கலெக்ஷன் வேலையை பார்த்து வருகிறார்களாம்.