அடகு கடைக்காரர் ஏமாற்றுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயற்சி!

அடகு கடைக்காரர் ஏமாற்றுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயற்சி!

கு.அசோக்,

வேலூர்மாவட்டம்,லத்தேரி அருகேயுள்ள பனமடங்கி ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன்.  இவர் பணத்தேவைக்காக வீட்டிலிருந்த 10 சவரன் நகையை பனமடங்கியில் உள்ள ஒரு அடகு கடையில் அடகு வைத்து வட்டிக்கு ரூ.80 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

  மீண்டும் ஒரு ரூ./20 ஆயிரம் அதே நகையின் மீது கடன் பெற்றுள்ளார். தற்போது நகையை மீட்க அவர் முயன்ற போது அவர் அடகு வைத்த நகை காலாவதியாகிவிட்டதாகவும் வழங்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள நகையை வெறும் 1 லட்சத்திற்கு ஏமாற்றுவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த போது தீகுளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்தனா.

 பின்னர் கவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.